காணாமல் போன முதியவர் கிணற்றில் பிணமாக மீட்பு
அந்தியூர்:அந்தியூர் அருகேயுள்ள பள்ளிபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம், 71; கூலி தொழிலாளி. கடந்த, 3ம் தேதி வேலைக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. அந்தியூர் போலீசில் மனைவி பழனியம்மாள் புகார் அளித்தார். இந்நிலையில் வெள்ளித்திருப்பூர் அருகே ஒலகடத்தில், விவசாயி ஒருவரின் தண்ணீரில்லாத கிணற்றில் இறந்து கிடந்தார். வெள்ளித்திருப்பூர் போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் சடலத்தை மீட்டனர். தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு விவகாரமா என்பது குறித்து விசாரணை நடக்கிறது.