உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கபடி வீராங்கனைக்கு எம்.எல்.ஏ., பாராட்டு

கபடி வீராங்கனைக்கு எம்.எல்.ஏ., பாராட்டு

அந்தியூர்: அந்தியூர் அருகே செம்புளிச்சாம்பாளையத்தை சேர்ந்த வாசுதே-வன்-பழனியம்மாள் தம்பதி மகள் நர்மதா, 19; தற்போது எண்ண-மங்கலத்தில் வசிக்கின்றனர். அந்தியூர் ஏ.இ.டி., ஸ்பேர்ட்ஸ் கிளப்பில், நர்மதா கபடி பயிற்சி மேற்கொள்கிறார். டெல்லியில் சமீபத்தில் நடந்த தேசிய கபடி போட்டியில், தமிழக அணியில் இடம் பிடித்தார். இறுதிப்போட்டியில் டெல்லி அணியை வீழ்த்தி, தமிழக அணி தங்கப்பதக்கம் வென்றது. நர்மதா உதவி கேப்டனாக ஆடினார். இந்நிலையில் நர்மதாவை, எண்ணமங்கலத்திலுள்ள அவரது வீட்டில், அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம் நேற்று சந்தித்து பாராட்டி வாழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை