உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மொபைல் போன் திருடியவர் கைது

மொபைல் போன் திருடியவர் கைது

ஈரோடு, சென்னிமலையை சேர்ந்த துரைசாமி மகன் அருண் குமார், 29. கடந்த, 25ல் கொல்லம்-ஹைதராபாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் பாலக்காட்டில் இருந்து ஈரோட்டுக்கு பொது பெட்டியில் வந்தார். ஈரோடு ஸ்டேஷனில் இறங்கியபோது மொபைல்போன் மாயமானது தெரியவந்தது. அவர் புகாரின்படி ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்தனர்.நேற்று முன்தினம் மாலை ரயில்வே ஸ்டேஷன் முன் சந்தேகத்துக்கு இடமான வகையில் நடமாடிய, ஈரோடு முத்தம்பாளையம் ஹவுசிங் யூனிட் இளங்கோ மகன் பூவரசனை, 22, பிடித்து விசாரித்தனர். பெயிண்டரான அவர், போனை திருடியது உறுதியானது. அவரை கைது செய்து, மொபைல் போனை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ