மேலும் செய்திகள்
இரண்டாம் சோம வாரம் பக்தர்கள் சுவாமி தரிசனம்
26-Nov-2024
வெண்ணந்துார் அருகே, மாட்டுவேலம்பட்டி பஞ்.,க்குட்பட்ட அலவாய்மலையில் பாலசுப்ரமணிய சுவாமி கோவில் அமைந்துள்-ளது. இங்கு சோமவார திருவிழா, ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் உள்ள, 5 திங்கட்கிழமைகளில் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி, 3வது திங்கட்கிழமையான, நேற்று ஆயிரக்க-ணக்கான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் அடிவாரத்தில் புதிதாக சுயம்பு நாகராஜன் என்ற புற்றுக்கண் உரு-வாகி உள்ளதால், பொதுமக்கள் அதன் மீது மஞ்சள், சிகப்பு துாவி வணங்கினர்.மேலும், மலை மீது ஏறமுடியாத பக்தர்களுக்கு, மலை அடிவா-ரத்தில் உற்சவ சிலை வைத்து பக்தர்களுக்கு ராஜ அலங்காரத்தில் அருள்பாலித்தார். பொதுமக்கள் இக்கோவிலுக்கு வருவதற்கு, அரசு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்திருந்தனர்.
26-Nov-2024