உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / இரண்டு வீடுகளில் பணம் திருட்டு

இரண்டு வீடுகளில் பணம் திருட்டு

பவானி:அம்மாபேட்டையில் இருந்து அந்தியூர் செல்லும் சாலையில், செந்துார் நகரை சேர்ந்தவர் ரவி, 38: இவர், அம்மாபேட்டையில் மொபைல்போன் சர்வீஸ் கடை நடத்தி வருகிறார். இவர் குடும்பத்தினருடன் பர்கூர் பகுதியில் குடியிருந்து, வாரம் ஒரு முறை மட்டுமே, அம்மாபேட்டையில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து செல்வார். இந்நிலையில், நேற்று காலை, செந்துார் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 8,590 ரூபாயை மர்ம நபர்கள் திருடிசென்றது தெரியவந்தது.இதே போல், அவரது பக்கத்து வீடான, பத்மா, 47, என்பவர் சென்னையில் நுாலகராக வேலை செய்து வருகிறார். இவரும், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை மட்டுமே, அம்மாபேட்டை வந்து செல்வார். இவரது வீட்டின் பூட்டும் உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 14 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது.அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ