மேலும் செய்திகள்
மின் வேலியில் சிக்கி யானை பலி
07-Oct-2024
பள்ளி மாணவன் தற்கொலை
07-Oct-2024
சத்தியமங்கலம், நவ. 1-ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக பகுதியில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. இந்நிலையில், கடம்பூரை அடுத்த அத்தியூர் கேர்மாளம் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு, வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஈரோட்டுக்காரர் தோட்டத்தில் கடமான் ஒன்று முள்கம்பி வேலியில் கிடப்பதை பார்த்தனர். டார்ச் லைட் அடித்து அருகில் சென்று பார்த்தபோது, முள்கம்பி வேலியின் அடியில் சுருக்கு வைக்கப்பட்டுள்ளதையும், சுருக்கு கம்பியில் பெண் கடமான் ஒன்று மாட்டி இறந்து கிடந்ததும் தெரிய வந்தது.பின்பு அந்த பகுதியில், வனத்துறை பணியாளர்கள் மறைந்து கண்காணித்து வந்தனர். அப்போது மர்ம நபர் ஒருவர், சுருக்கு கம்பியில் சிக்கி இறந்து கிடந்த கடமனை அவிழ்க்க முயன்ற போது, சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்தனர்.அவரிடம் நடத்திய விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த பொன்னையன், 50, என்பது தெரியவந்தது. அவரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
07-Oct-2024
07-Oct-2024