விஷத்தில் மகள் கொலை தாய்க்கு தீவிர சிகிச்சை
வெள்ளகோவில் :வெள்ளகோவிலை அடுத்த முத்துார், மங்களப்பட்டி, காங்கேயம்பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன், 47; காங்கேயம் அரசு போக்குவரத்து கிளை டிரைவர். இவரின் மகள் லாவண்யா, 25; உறவினரான கவுதம் என்பவரை இரண்டு ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்தார். தம்பதிக்கு ஒரு வயதில் பெண் குழந்தை உள்ளது. எட்டு மாதத்துக்கு முன் மாரடைப்பால் கவுதம் இறந்ததால் லாவண்யா மன உளைச்சலுக்கு ஆளானார்.நேற்று முன்தினம் மகளுக்கு விஷம் கொடுத்து விட்டு, லாவண்யாவும் விஷம் குடித்து விட்டார். வாயில் நுரையுடன் மயங்கி கிடந்த இருவரையும் குடும்பத்தினர் மீட்டு, ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவ பரிசோதனையில் குழந்தை இறந்து விட்டது தெரிய வந்தது. லாவண்யா மேல் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து வெள்ளகோவில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்