சிறுமிக்கு பாலியல் தொல்லை தாயின் ௨வது கணவன் கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லைதாயின் ௨வது கணவன் கைது காங்கேயம், நவ. 24-திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகேயுள்ள விருமாண்டம்பாளையத்தை சேர்ந்தவர் லோகநாதன், 27; ஈரோட்டை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடத்துகிறார். அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி எட்டு வயதில் பெண் குழந்தை, ஆண் குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் லோகநாதன், எட்டு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின்படி விசாரித்த காங்கேயம் அனைத்து மகளிர் போலீசார், லோகநாதனை கைது செய்து, காங்கேயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, திருப்பூர் சிறையில் அடைத்தனர்.