விளையாட்டு மகனால் தாய் விபரீத முடிவு
ஈரோடு, ஈரோடு, நல்லி தோட்டம், விவேகானந்தா சாலையை சேர்ந்தவர் ராமசந்திரன், 49; முடிதிருத்தும் கடை வைத்துள்ளார். இவர் மனைவி மகாலட்சுமி, 37; கோழி கடைக்கு தினக்கூலி வேலைக்கு சென்றார். இவர்களின் மகன் தனிஷ், 11. இடையன்காட்டுவலசு பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறார். சிறுவர்களுடன் விளையாடி விட்டு இரவில் வெகுநேரம் கழித்து தனிஷ் வீட்டுக்கு வருவதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இதை மகாலட்சுமி பலமுறை கண்டித்துள்ளார்.நேற்று முன் தினம் காலை விளையாட சென்ற தனிஷை அவரது தந்தை ராமசந்திரன், இரவு, 8:00 மணிக்கு அழைத்து வந்துள்ளார். அனைவரும் சாப்பிட்டு விட்டு துாங்கிவிட்டனர். நேற்று அதிகாலை எழுந்து பார்த்த போது மகாலட்சுமி மின்விசிறியில் துாக்கிட்ட நிலையில் தொங்கினார்.ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இறந்து விட்டது தெரிந்தது. தனது பேச்சை மகன் கேட்காத விரக்தியில் மகாலட்சுமி துாக்கிட்டு கொண்டதாக, வீரப்பன்சத்திரம் போலீசில் ராமசந்திரன் புகாரளித்துள்ளார்.