சென்னிமலை மலை கோவிலில் மீண்டும் மலைப்பாதை சீரமைப்பு பணி தொடக்கம்
சென்னிமலை: சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவி-லுக்கு செல்லும் மலைப்பாதை சாலையை 6.௭௦ கோடி ரூபாய் மதிப்பில் சீரமைக்கும் பணியை, கடந்த ஆண்டு ஜூலை, 24ம் தேதி முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்-சியில் தொடங்கி வைத்தார். இதை தொடர்ந்து சீரமைப்பு பணி நடந்தது.இந்த பணிக்காக மலைப்பாதையில் மரம், தாவரங்கள் அகற்றப்-பட்டதாக கூறி, 15 நாட்களுக்கு முன் சீரமைப்பு பணியை வனத்து-றையினர் நிறுத்தினர். இது சம்பந்தமான ஆவணங்களுடன் நேரில் ஆஜராக, ஈரோடு வனச்சரக அலுவலகம் மூலம், சென்னிமலை கோவில் செயல் அலுவலருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதன்படி கோவில் நிர்வாகத்தினர், வனச்சரக அலுவலகத்துக்கு சென்றனர். அப்போது இருதரப்பு அதிகாரிகளிடையே சுமுக உடன்பாடு ஏற்பட்டது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் முதல் மலைப்பாதை சீர-மைக்கும் பணி மீண்டும் தொடங்கியது. இதற்காக மீண்டும் பொக்லைன் இயந்திரம் கொண்டு வரப்பட்டது. விரைவில் சீர-மைப்பு பணி செய்து முடிக்கப்படும் என பக்தர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.