உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மலையாளி இன மக்களுக்கு பழங்குடியின அங்கீகாரம் மத்திய அமைச்சரிடம் எம்.பி., வலியுறுத்தல்

மலையாளி இன மக்களுக்கு பழங்குடியின அங்கீகாரம் மத்திய அமைச்சரிடம் எம்.பி., வலியுறுத்தல்

ஈரோடு, டிச. 19-ஈரோடு மாவட்ட, 'மலையாளி' இன மக்களுக்கு பழங்குடியின அங்கீகாரம் வழங்க கோரி, மத்திய பழங்குடியினர் விவகாரத்துறை அமைச்சர் ஸ்ரீஜீவல் ஓரத்தை சந்தித்து, திருப்பூர் எம்.பி., சுப்பராயன் மனு வழங்கியுள்ளார்.அதில் கூறியிருப்பதாவது:ஈரோடு மாவட்டம் அந்தியூர், சத்தியமங்கலம் தாலுகாக்களில் உள்ள பர்கூர், கடம்பூர் மலைப்பகுதிகளில், 'மலையாளி' இன மக்கள், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இவர்களை போன்றோர் பக்கத்தில் உள்ள சேலம், நாமக்கல், தர்மபுரி, திருச்சி மாவட்டங்களில் பழங்குடியினர் பட்டியலில் உள்ளனர். ஆனால், ஈரோடு மாவட்டத்தில் மட்டும், 'இதரர்' என்ற பிரிவில் உள்ளனர். இங்குள்ள மக்களின் பண்பாடு, கலாசார வழக்கங்கள், பிற மாவட்ட மலையாளி மக்களை ஒத்துள்ளன. பெண் கொடுத்து எடுக்கின்றனர். சென்னை பல்கலை கழக மானுடவியல் துறை, உதகை பழங்குடியினர் ஆய்வு மையம் ஆகியவை, இம்மக்களின் பண்பாடு, பழக்க வழக்கங்களை ஆய்வு செய்து, 'இவர்கள் பழங்குடியினர்தான்' என அறிக்கை அளித்துள்ளனர்.ஆனாலும், ஈரோடு மாவட்ட 'மலையாளி' இன மக்கள், 'இதரர்' பிரிவில் உள்ளதால், கல்வி, வேலைவாய்ப்பில் பின்தங்கி உள்ளனர். பழங்குடியினருக்கான சலுகைகளை பெற முடியவில்லை. இவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க, மாநில அரசின் முன்மொழிவை பெற்று, மத்திய அரசு, அரசியல் சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இதற்காக தமிழக அரசு பல முறை முன்மொழிவுகள் அனுப்பியும், மத்திய அரசு சட்டத்திருத்தம் செய்யாமல் உள்ளது. கடந்தாண்டும் மனு வழங்கி, பார்லிமென்ட்டில் பேசி வலியுறுத்தி உள்ளேன். தமிழக அரசு தற்போதும், முன்மொழிவை அனுப்பி உள்ளது. மத்திய அரசு அதனை ஏற்று, சட்டத்திருத்தம் செய்யாமல், நியாயமற்ற சந்தேகங்களை எழுப்பி, அரசிடம் விளக்கம் கேட்டு வருகிறது. இதை தவிர்த்து, பழங்குடியினர் அங்கீகாரம் வழங்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை