உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வீட்டில் திருட முயன்ற கில்லாடி ஆசாமி கைது

வீட்டில் திருட முயன்ற கில்லாடி ஆசாமி கைது

ஈரோடு:ஈரோடு அருகேயுள்ள 46 புதுார் நொச்சிகாட்டு வலசு கம்பன் நகரை சேர்ந்தவர் கோபால், 58; குடும்பத்துடன் சென்னையில் வசிக்கிறார். கடந்த ஏப்.,16ம் தேதி நள்ளிரவில் இவரது வீட்டு கதவை உடைக்கும் சத்தம் கேட்டது. அக்கம்பக்கத்தினர் சென்று பிடிக்க முயன்றபோது ஆசாமி தப்பி விட்டார். புகாரின்படி ஈரோடு தாலுகா போலீசார் ஆசாமியை தேடி வந்தனர். இது தொடர்பாக ஈரோடு கோணவாய்க்கால் மோகன் தோட்டத்தை சேர்ந்த மணிகண்டன், 43, என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் மீது, 25க்கும் மேற்பட்ட திருட்டு, வழிப்பறி வழக்குகள் உள்ளதாக தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை