மேலும் செய்திகள்
தொழிலாளி மர்ம சாவு போலீசார் விசாரணை
21-Aug-2025
ஈரோடு, ஈரோடு, கருங்கல்பாளையம், லட்சுமி நாராயண் நகரை சேர்ந்தவர் திவாகர், 41. இவருக்கு திருமணமாகவில்லை. இவர், அமெரிக்காவில் எம்.பி.ஏ., படித்துள்ளார். இவருக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் மனநிலை பாதிக்கப்பட்டு, கர்நாடகா மாநிலம், பெங்களுருவில் மத்திய அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.ஈரோட்டில் அவரது வயதான பெற்றோருடன் சமீபமாக வசித்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் உள்ளது. கடந்த, 19ம் தேதி இரவில் வீட்டில் சாப்பிட்டுவிட்டு, மூன்றாவது தளத்தில் தனது அறைக்கு துாங்க சென்றார். மறுதினம் திவாகரின் தாய் வளர்மதி, அறை கதவை தட்டியும் திறக்காததால், வெளியே சென்றிருப்பார் என நினைத்துவிட்டார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டின் இரண்டாம் தளத்தில் வாடகைக்கு வசிப்போர், மூன்றாம் தளத்தில் துர்நாற்றம் வீசுவதாக கூறியதால், அறையை உடைத்து பார்த்தனர். அங்கு அழுகிய நிலையில் திவாகர் இறந்து கிடந்தார்.திவாகர் தந்தை சுப்பிரமணியம் கொடுத்த புகார்படி, கருங்கல்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
21-Aug-2025