நல்லாம்பட்டி விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை
கோபி, நல்லாம்பட்டி அணைக்கட்டு நீரினை பயன்படுத்துவோர் சங்கத்தினர், கவுந்தப்பாடியில் விழாவில் பங்கேற்க வந்த, ஈரோடு கலெக்டர் கந்தசாமியிடம் நேற்று மனு வழங்கினர்.மனு விபரம்:நல்லாம்பட்டி அணைக்கட்டு கால்வாயில் மதகு எண் 1க்கு முன்னால் உள்ள பாலத்தில் இருந்து, மதகு எண்: 2ன் பின்னால் உள்ள பாலத்துக்கு இடைப்பட்ட பகுதி கால்வாய் கரை பலவீனமாக உள்ளது. இதனால் மழை காலங்களில் கரைக்கு மேல் நீர் சென்று உடைப்பு ஏற்பட்டு பல விதமாக வீணாகிறது. இதனால் கரையை பலப்படுத்த வேண்டும். மதகு எண் 3ல் இருந்து, மதகு எண் 4 வரை கால்வாய் 20 அடி ஆழத்தில், இரண்டரை அடி அகலத்தில் செல்கிறது. அங்கு கல் மற்றும் மண் சரிந்து விழுகிறது. அதேபோல் அப்பகுதியில் ஆக்கிரமிப்பும் உள்ளது. இதை கலெக்டர் பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுத்தால், கடைமடை பகுதிக்கு தண்ணீர் தடையின்றி செல்லும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.