மேலும் செய்திகள்
உடற்கல்வி ஆசிரியர் இல்லாமல் விளையாட்டு விழா
10-Oct-2024
ஈரோடு, அக். ௧௮-ஈரோடு வருவாய் மாவட்ட அளவிலான எறிபந்து போட்டி இளையோர் பிரிவில், நம்பியூர் காமராஜ் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். அதேசமயம் மாணவர் இளையோர் பிரிவில் மூன்றாமிடம் பிடித்தது. தடகள போட்டியில் ஒன்பதாம் வகுப்பு மாணவன் ஜீவ நிகிலேஷ், 14 வயதுக்கு உட்பட்டோர், 400 மீ., ஓட்டத்தில், இரண்டாமிடம் பெற்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்றார்.வெற்றி பெற்ற மாணவர்கள், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் சரவணபவ, இந்துமதி ஆகியோரை, பள்ளி செயலர் ஜவகர், இணை செயலர் சுமதி ஜவகர், முதல்வர், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
10-Oct-2024