நந்தா பொறியியல் கல்லுாரி 20வது பட்டமளிப்பு விழா
ஈரோடு: ஈரோடு நந்தா பொறியியல் கல்லுாரியின், 20வது ஆண்டு விழா, தொழில் நுட்ப கல்லுா-ரியின், 14வது பட்டமளிப்பு விழா நடந்தது. ஸ்ரீநந்தா கல்வி அறக்-கட்டளை தலைவர் சண்முகன் தலைமை வகித்து பேசினார். பொறியியல் கல்லுாரி முதல்வர் ரகுபதி, தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் நந்தகோபால், ஆண்டறிக்கை வாசித்தனர். சிறப்பு விருந்தினரான மும்பை கே.பி.எம்.ஜி., நிறுவன மூத்த இணை இயக்குனர் சகில் நாயர், தரவரிசையில் இடம் பெற்ற, 41 மாணவர் உட்பட இளங்கலை பொறியியல் துறையில், 637 மாணவர், முதுகலை பொறியியல் துறையில், 110 மாணவர் என, 747 மாணவர்கள்; நந்தா தொழில்நுட்ப கல்லுாரியில் தரவரி-சையில் இடம் பெற்ற, 10 மாணவர் உட்பட இளங்கலை பொறி-யியல் துறையில், 140 மாணவர்களுக்கும் பட்டம் வழங்கி பேசினார்.ஸ்ரீ நந்தா கல்வி அறக்கட்டளை உறுப்பினர் பானுமதி சண்முகன், செயலர் நந்தகுமார் பிரதீப், நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர் திருமூர்த்தி, முதன்மை கல்வி அதிகாரி ஆறுமுகம், தொழில்நுட்ப வளாக நிர்வாக அலுவலர் வேலுசாமி முன்னிலை வகித்தனர்.