உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நடுமலை மாதேஸ்வரன் கோவிலில் நந்தி வழிபாடு

நடுமலை மாதேஸ்வரன் கோவிலில் நந்தி வழிபாடு

சத்தியமங்கலம்: ஆண்டுதோறும் மாட்டு பொங்கல் பண்டிகை நாளன்று மட்டுமே, திறக்கப்படும் சத்தியமங்கலம் நடுமலை மாதேஸ்வரன் கோவில் விழாவில் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் வளம்பெற நேற்று சிறப்பு பூஜை நடந்தது. தொழுவத்தில் கட்டியிருந்த மாடுகளை குளிப்பாட்டி, அவற்றின் கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி கழுத்தில் மணிகள், பாசிகள் சேர்க்கப்பட்ட அலங்கார கயிறுகள் கட்டி விவசாயிகள் அழகுப்படுத்தினர். புளியம்கோம்பையில் உள்ள நடுமலை மாதேஸ்வரன் கோவிலில் நந்தீஸ்வரன், நந்தி சிலைகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனை நடந்தது. கால்நடைகள் நோயின்றி நீண்ட நாள் வாழவும், விவசாயம் செழிக்கவும் பொங்கல் வைத்து மண் உருவ பொம்மைகளை காணிக்கையாக செலுத்தி வழிபடுவது வழக்கம். அதன்படி விவசாயிகள் மாடுகள், காவல் நாய் போன்ற மண் உருவ பொம்மைகளை நேர்த்திக்கடனாக செலுத்தி வழிபட்டனர். விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !