உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நாளை தேசிய குடற்புழு நீக்க சிறப்பு முகாம்

நாளை தேசிய குடற்புழு நீக்க சிறப்பு முகாம்

ஈரோடு:தேசிய குடற்புழு நீக்க தின முகாம் நாளை நடக்கவுள்ளது. உலக மக்கள் தொகையில் மண் மூலம் பரவும் குடற்புழு தொற்று, 24 சதவீதம் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளதாக, உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கிறது. தமிழகத்தில் குடற்புழு தொற்று, 5 - 10 சதவீதமும், பழங்குடி மக்களிடம், 39 சதவீதம் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதித்தோருக்கு இரும்பு சத்து குறைபாடு, ரத்த சோகை நோய், ஊட்டச்சத்து, விட்டமின் 'ஏ', உடல் வளர்ச்சி குறைபாடு ஏற்படும். இதை தடுக்க நாளை முதல் குடற்புழு நீக்க முகாம் நடக்கிறது. ஈரோடு மாவட்டத்தில், 2,080 அங்கன்வாடி மையங்களில், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், அனைத்து வகை பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் என, 5 லட்சத்து, 44,350 பயனாளிகளுக்கும், 20 முதல், 30 வயது வரை உள்ள, 1 லட்சத்து, 21,715 பெண் பயனாளிகளுக்கும், அல்பெண்டாசோல் மாத்திரை வழங்கப்படுகிறது. குடற்புழு தொற்றை தடுக்க திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்க்க வேண்டும். இந்த முகாமில் விடுபட்டவர்களுக்கு, 17ல் மாத்திரை வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !