வேளாளர் கல்லுாரியில் தேசிய கருத்தரங்கு
வேளாளர் கல்லுாரியில் தேசிய கருத்தரங்குஈரோடு, செப். ௧௫-ஈரோடு, திண்டல் வேளாளர் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லுாரியில் சிவில், சி.எஸ்.இ., இ.சி.இ., மற்றும் எம்.டி.இ., துறைகளின் சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு நடந்தது. வேளாளர் கல்வி அறக்கட்டளை செயலாளர் சந்திரசேகர் தலைமை வகித்தார். வேளாளர் கல்வி அறக்கட்டளை உறுப்பினர் யுவராஜா தலைமை வகித்து பேசினார்.கல்லுாரி முதல்வர் ஜெயராமன் பேசும்போது, 'தேசிய கருத்தரங்கின் மூலம், மாணவர்கள் வெளிஉலகின் நடப்புகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள முடிகிறது' என்றார்.திருச்சி சர்வதேச விமான நிலைய விமான போக்குவரத்து மேலாண்மை உதவி மேலாளர் தீபக், சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விமானத்துறையில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து விளக்கமளித்து பேசினார். மாநிலம் முழுவதும் உள்ள, 45 கல்வி நிறுவனங்களை சேர்ந்த, 245 மாணவ, மாணவியர் கருத்தரங்கில் பங்கேற்றனர்.