மேலும் செய்திகள்
கோவில்களில் நவராத்திரி விழா இன்று துவக்கம்
03-Oct-2024
ஈரோடு, அக். 4-ஈரோடு, கொங்கலம்மன் கோவிலில், 36ம் ஆண்டு நவராத்திரி விழா நேற்று தொடங்கியது. இதையொட்டி சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் அலங்காரத்தில், அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று முதல், ௧௧ம் தேதி வரை தினமும் ஒவ்வொரு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பார். நவராத்திரி நிறைவு நாளான, 12ம் தேதி நவ மகா சண்டிஹோமம், கோவிலில் நடக்கிறது.* நவராத்திரி விழா முதல் நாளான நேற்று, சென்னிமலை அருகே மேலப்பாளையம் ஆதித்யா நகரில், நர்மதை மருந்தீஸ்வரர் கோவிலில் கொலுபூஜை நேற்று நடந்தது. வரும், -12ம் தேதி வரை விழா நடக்கிறது. விழாவையொட்டி தினமும் மாலை, 6:௦௦ மணி தொடங்கி இரவு, 8:௦௦ மணி வரை பூஜை நடக்கிறது. * புன்செய்புளியம்பட்டி கரிவரதராஜ பெருமாள் மற்றும் அம்மன் கோவில்களில், நவராத்திரி விழா நேற்று துவங்கியது. நவராத்திரி விழாவை ஒட்டி,சவுடேஸ்வரி அம்மன், காமாட்சியம்மன்,பிளேக் மாரியம்மன், கரிவரதராஜ பெருமாள் கோவில்களில்,கொலு பொம்மைகள் கோவில் வளாகத்தில் வைத்து, தினமும் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்பு பூஜை நடக்கிறது. தினமும் அம்மன் பல்வேறு அலங்காரங்களில் எழுந்தருளுகிறார். * அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவிலில், நவராத்திரி கொலு நேற்று அமைக்கப்பட்டது. இதில் கிருஷ்ணரின் ஒன்பது அவதாரங்கள், நவகிரகங்களின் பொம்மைகள், சிவ, பார்வதி திருக்கல்யாண வைபவம் உள்ளிட்ட பல்வேறு கொலு பொம்மை வைக்கப்பட்டுள்ளது.
03-Oct-2024