புதிய பாரத எழுத்தறிவு திட்டம்; நம்பியூரில் ஆய்வு
நம்பியூர்: பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தில், புதிய பாரத எழுத்தறிவு திட்டம் செயல்பட்டு வருகிறது. இதில் முற்றிலும் எழுதப் படிக்கத் தெரியாத, 15 வயதுக்கு மேற்பட்டோர்களுக்கு எழுத்தறிவு, எண்ணறிவு பயிற்சி அளிக்கப்படுகிறது.இதில் நம்பியூர் ஒன்றியத்தில், 2024-25ம் கல்வியாண்டில் முதற்கட்டமாக, 35 கற்போர் மையங்கள் செயல்பட்டு வருகிறது. இதை பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்க இயக்குனர் நாகராஜமுருகன் நேற்று பார்வையிட்டார். இதில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களுடன் கலந்துரையாடி அவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.