உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சென்னிமலையில் புதிய ஜவுளி சங்கம் துவக்கம்

சென்னிமலையில் புதிய ஜவுளி சங்கம் துவக்கம்

சென்னிமலை:சென்னிமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், ஜவுளி தொழிலை மேம்படுத்த, உற்பத்தியாளர் மற்றும் விற்பனையாளர் நலனை பாதுகாக்க, சென்னிமலை வட்டார ஜவுளி உற்பத்தி-யாளர் மற்றும் விற்பனையாளர் சங்கம் என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. சங்கத்தின் முதல் பொதுக்குழு கூட்டம், சென்னிமலையில் நேற்று நடந்தது. இதில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். தலைவராக மேலப்பாளையம் மூர்த்தி டெக்ஸ் டைல்ஸ் ஈஸ்வர-மூர்த்தி, செயலாளராக ஸ்ரீவிக்னேஷ் டெக்ஸ்டைல்ஸ் கோபு, பொருளாளராக மோகன்ராஜா டெக்ஸ்டைல்ஸ் கோபால், ஸ்ரீ கல்பனாதேவி டெக்ஸ்டைல் ராமசாமி துணை தலைவராக, இணை செயலாளராக ஸ்ரீ பேப்ரிக்ஸ் விஜயகுமார், கே.ஆர்.பேப்ரிக்ஸ் ரகுபதி, கே.எம்.எஸ்.டெக்ஸ் மோகன் தேர்வு செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ