உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / புதிய வி.ஆர்.ஐ., 5 வெள்ளை எள் விதைப்பண்ணை ஆய்வு

புதிய வி.ஆர்.ஐ., 5 வெள்ளை எள் விதைப்பண்ணை ஆய்வு

ஈரோடு பவானி தாலுகா புன்னம் கிராமத்தில், விவசாயி பெரியசாமி நிலத்தில், வி.ஆர்.ஐ., 5 என்ற வெள்ளை எள் புதிய ரகம், ஆதார நிலை - 2 விதைப்பண்ணை அமைத்துள்ளார். இதை ஈரோடு மாவட்ட விதை சான்றளிப்பு மற்றும் உயிர்ம சான்றளிப்பு உதவி இயக்குனர் சத்தியராஜ் தலைமையில் ஆய்வு செய்து, விதை சான்று அலுவலர்களுக்கு பயிற்சி வழங்கினர்.வி.ஆர்.ஐ.,5 வெள்ளை எள், விருத்தாசலம் ஆராய்ச்சி நிலையத்தில், 2023 ல் வெளியிடப்பட்டது. இதன் வயது, 75 முதல், 85 நாட்கள். இறவை, மானாவாரிக்கு உகந்த ரகம். இறவைக்கு, 700 முதல், 800 கிலோ வரை மகசூல் கிடைக்கும். அடர் நடவுக்கு ஏற்றது. இந்த ரகம், சாறு உரியும் பூச்சிகளுக்கு எதிர்ப்பு திறன் கொண்டது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை