உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஊராட்சி தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்கவில்லைடி.என்.பாளையத்தில் மறியல்

ஊராட்சி தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்கவில்லைடி.என்.பாளையத்தில் மறியல்

ஊராட்சி தீர்மானத்தின் மீது நடவடிக்கை எடுக்கவில்லைடி.என்.பாளையத்தில் மறியல்டி.என்.பாளையம்:-டி.என்.பாளையம் அருகே கொங்கர்பாளையம் ஊராட்சி உறுப்பினர்கள் கூட்டத்தில், குண்டேரிப்பள்ளம் அணை அருகே தனியார் நிலத்தில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட ஆழ்குழாய் கிணற்றை மூடி சீல் வைக்க, இரண்டு ஆண்டுகளுக்கு முன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி ஆழ்குழாய் கிணற்றை மூட நடவடிக்கை எடுக்காத, டி.என்.பாளையம் ஒன்றிய, வட்டார வளர்ச்சி அதிகாரிகளை கண்டித்து, நுாற்றுக்கும் மேற்பட்ட மக்கள் டி.என்.பாளையத்தில் அண்ணாதுரை சிலை அருகே, அத்தாணி-சத்தி சாலையில் அமர்ந்து, நேற்று மறியலில் ஈடுபட்டனர். கோபி டி.எஸ்.பி., தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் மறியலில் ஈடுபட்டோரை, போலீசார் கைது செய்தனர். மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி