உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வாரச்சந்தையில் காற்றோட்ட வசதி இல்லை

வாரச்சந்தையில் காற்றோட்ட வசதி இல்லை

கோபி,: கோபி நகராட்சி சார்பில், 1.73 கோடி ரூபாயில் கூடாரத்துடன் கூடிய வாரச்சந்தை, 2024 ஜூலை முதல் பயன்பாட்டுக்கு வந்தது. தற்போது வாரந்தோறும் சனிக்கிழமை, 80க்கும் மேற்பட்ட காய்-கறி வியாபாரிகள் வியாபாரம் செய்கின்றனர். மின் இணைப்பு வழங்காததால், வியாபாரத்துக்கு பயன்படுத்தும் எலக்ட்ரானிக் தராசுக்கு சார்ஜ் போட வழியில்லை. அவரவர் வீட்-டிலேயே சார்ஜ் போட்டு வருகின்றனர். கூடாரத்தின் பக்கவாட்டில் பொருத்தியுள்ள தகர சீட்டால் காற்-றோட்டமின்றி அவதியுறுகிறோம். எனவே நால்புறமும் உள்ள தகர சீட்டை அகற்ற வேண்டும். தாகம் தணிக்க தண்ணீர் இல்லை. நகராட்சி நிர்வாகம், முறையாக மின் இணைப்பு வழங்கியும், கூடாரத்தின் பக்கவாட்டில் உள்ள தகரசீட்டை அகற்றியும், தண்ணீர் வசதியும் ஏற்படுத்தி தர, வியா-பாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை