உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / சொந்த ஊர்களுக்கு செல்லும் வட மாநில தொழிலாளர்கள்

சொந்த ஊர்களுக்கு செல்லும் வட மாநில தொழிலாளர்கள்

ஈரோடு, தீபாவளி நெருங்கும் நிலையில், வட மாநில தொழிலாளர்கள் ஊர்களுக்கு ரயிலில் செல்ல துவங்கியுள்ளனர்.தீபாவளி பண்டிகை வரும் 20ல் கொண்டாடப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றி வரும், வட மாநில தொழிலாளர்கள் தீபாவளியை தங்கள் சொந்த ஊரில் கொண்டாட கிளம்ப துவங்கியுள்ளனர். இதனால் வட மாநிலத்துக்கு செல்லும் ரயில்களில் கணிசமான அளவு கூட்டம் அதிகரித்து வருகிறது. எர்ணாகுளத்தில் இருந்து பீகார் தலைநகர் பாட்னா செல்லும் ரயில் தினமும் மதியம் ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் வருகிறது. நேற்று இந்த ரயிலில் செல்வதற்காக நுாற்றுக்கணக்கான வட மாநில தொழிலாளர்கள் காத்திருந்தனர்.தீபாவளி பண்டிகையை ஒட்டி பெரும்பாலான ஆலைகள், நிறுவனங்கள் ஒரு வாரம் வரை விடுமுறை விடும் என்பதால், வட மாநில தொழிலாளர்கள் மூட்டை முடிச்சுகளுடன் ஊருக்கு புறப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ