உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நவ.25-ல் கூடுகிறது பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர்

நவ.25-ல் கூடுகிறது பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர்

புதுடில்லி: பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர் வரும் 25-ம் தேதி துவங்கி டிச. 20 ம் தேதி வரை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.இக்கூட்டத்தொடரின் போது முக்கிய மசோதாக்களான ‛ஒரு தேசம், ஒரு தேர்தல்'' , வக்பு வாரிய திருத்த மசோதா உள்ளிட்ட மசோதாக்களை நிறைவேற்றிட மத்திய அரசு தீவிரம் காட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.முன்னதாக கடந்த 1949, நவ., 26ல், இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டு அரசியலமைப்பு சட்டம், 1950, ஜன., 26 முதல் நடைமுறைக்கு வந்தது. இதையடுத்து ஆண்டு தோறும் நவ.26, தேசிய சட்ட தினமாக கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் அரசியலமைப்பு, ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 75வது தினத்தையொட்டி பாராளுமன்ற மைய மண்டபத்தில் சிறப்பு கூட்டுக்குழு கூட்டமும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
நவ 03, 2024 06:54

வானளாவிய அதிகாரம் படைத்த வக்ப் வாரியத்தின் அதிகாரங்களை மட்டுப்படுத்துவது இஸ்லாமியர் அல்லாத சமூதாயங்களுக்கு நல்லது. இல்லை என்றால் மொத்த இந்தியாவும் ஒருகாலத்தில் மொகலாய ஆட்சியில் இருந்ததால் வக்ப் வாரியத்துக்குத்தான் அனைத்தும் சொந்தம் என்று உருட்டக்கூட வாய்ப்பிருக்கிறது.


சமீபத்திய செய்தி