மேலும் செய்திகள்
ஜூலை 17 ஆர்ப்பாட்டம் : செவிலியர்கள் முடிவு
09-Jul-2025
ஈரோடு, தமிழ்நாடு செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பில், மாவட்ட தலைவர் ஜெயசுகி தலைமையில், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை, ஆர்ப்பாட்டம் செய்தனர். செவிலியர் மற்றும் மருத்துவ ஊழியர்களை தற்காலிக, ஒப்பந்த முறையில் பணியமர்த்தும் முடிவை கைவிட வேண்டும். மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் உருவாக்கப்பட்டு தேர்வு நடத்தி, திறமையான ஊழியர்களை தேர்வு செய்ய வேண்டும். பணிநீக்கம் செய்யப்பட்ட செவிலியர், 700 பேருக்கு மீண்டும் பணி வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும் பணி வழங்காமல் காலியாக உள்ள பணியிடங்களை மாவட்ட நலவாழ்வு சங்கங்கள் மூலம் நிரப்புவதை கைவிட்டு, நிரந்தர தன்மையுடைய பணியில் நியமிக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
09-Jul-2025