நாமமிட்டு, மடிப்பிச்சை ஏந்தி சத்துணவு ஊழியர் போராட்டம்
ஈரோடு, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்க கூட்டமைப்பு சார்பில், கோரிக்கையை வலியுறுத்தி பட்டை நாமமிட்டும், மடிப்பிச்சை ஏந்தியும், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் தனுஷ்கோடி, மாவட்ட பொருளாளர் சித்ராதேவி, நிர்வாகிகள் மணிமேகலை, முருகன், செல்வி, சபானா ஆஷ்மி, சுப்புலட்சுமி உட்பட நுாற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.தேர்தல் கால வாக்குறுதிப்படி சிறப்பு பென்ஷன், 6,750 ரூபாய் வழங்க வேண்டும். சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி, 2.57 காரணியால் பென்ஷன் மற்றும் ஊதியத்தை திருத்தி அமைக்க வேண்டும். தேர்தல் வாக்குறுதி எண், 313ன்படி காலமுறை ஊதியம், சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு வழங்க வலியுறுத்தினர்.