ஊட்டச்சத்து இயல் பயிற்சி விண்ணப்பம் வரவேற்பு
ஈரோடு:தாட்கோ சார்பில் பிளஸ் 2 முடித்த ஆதிதிராவிடர், பழங்குடியினம் சார்ந்தவர்களுக்கு, தனியார் நிறுவனம் மூலம் 'உணவு, ஊட்டச்சத்து இயல் மற்றும் உடல் எடை சீரமைப்பு' பயிற்சி வழங்கப்பட உள்ளது. 18 முதல், 35 வயதுக்கு உட்பட்ட, குடும்ப வருவாய், 3 லட்சத்துக்கு உட்பட்டோர் பெறலாம். ராணிப்பேட்டை, திருவள்ளூர் மாவட்டத்தில், 50 நாட்கள் பயிற்சி வழங்கப்படும். பயிற்சி இடத்தில் தங்கி படிப்பதற்கான செலவை தாட்கோ ஏற்கும். www.tahdco.com ல் பதிவு செய்து பயிற்சியில் சேரலாம். கூடுதல் விபரத்தை மாவட்ட தாட்கோ மேலாளரை, 0424 2259453 என்ற எண்ணில் அணுகலாம்.