உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / 40 நாளாக பேசாத கணவன் சத்துணவு ஊழியர் விபரீதம்

40 நாளாக பேசாத கணவன் சத்துணவு ஊழியர் விபரீதம்

ஈரோடு:ஈரோடு திண்டல் வள்ளியம்மாள் நகரை சேர்ந்த செந்தில்குமார் மனைவி கிருஷ்ணவேணி, 35; வள்ளியம்மாள் நகர் பள்ளி சத்துணவு ஊழியர். தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த, 40 நாட்களாக கணவன், மனைவி இடையே பேச்சுவார்த்தை இல்லை. இதனால் கிருஷ்ணவேணி மனவேதனையில் இருந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் மின்விசிறியில் துாக்கிட்டு கொண்டார். குடும்பத்தினர் பார்த்து மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. ஈரோடு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி