உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஒரிச்சேரி சுடுகாட்டு பாதை விவகாரம் அதிகாரிகள் ஆய்வு; பாலம் கட்ட முடிவு

ஒரிச்சேரி சுடுகாட்டு பாதை விவகாரம் அதிகாரிகள் ஆய்வு; பாலம் கட்ட முடிவு

பவானி ஆப்பக்கூடல் அருகே ஒரிச்சேரி பஞ்., பாரதிநகரில், 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு ஆதி திராவிடர் நலத்துறை சார்பில், தொட்டியன் தோட்டம் பகுதியில் சுடுகாடு ஒதுக்கப்பட்டுள்ளது. சுடுகாட்டுக்கு செல்லும் வழியில் நீர்நிலை புறம்போக்கு ஓடைப்பாதை, அதை ஒட்டி தனி நபரின் பட்டா இடம் உள்ளது. மக்கள் பட்டா இடத்தில் செல்லும் வண்டிப்பாதையை சுடுகாட்டுக்கு செல்ல பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் சில மாதங்களுக்கு முன், பட்டா நில வண்டிப்பாதையை பயன்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, நில உரிமையாளர் உழுது, பாதையை அடைத்தார். இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த ஒரு மூதாட்டி நேற்று முன்தினம் இறந்தார். சடலத்தை பட்டா இடத்தில் உள்ள வண்டிப்பாதையில் கொண்டு செல்வதாக மூதாட்டியின் உறவினர்கள் கோரிக்கை வைத்தனர். இதற்கு நில உரிமையாளர் மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வருவாய் துறை அதிகாரிகள் இருதரப்பிரனரிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்த நிலையல், பவானி தாலுகா சர்வேயர் மூலம் நேற்று ஆய்வு நடந்தது. ஓடை புறம்போக்கு சாலையில் செல்லும்படி ஆய்வு செய்தனர். அந்த பாதையில் தண்ணீர் தேங்கும் இடத்தில், சிறு பாலம் அமைக்கவும் முடிவு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி