உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தேனீக்கள் கொட்டி முதியவர் பலி

தேனீக்கள் கொட்டி முதியவர் பலி

ஈரோடு: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, சல்லிமேடு பகுதியை சேர்ந்தவர் தங்கராஜ், 60, மீன் பிடி தொழிலாளி. மகன் அருள், மகள் சரண்யாவுடன், பாசூர், வேங்கியம்பாளையம் காவேரிக்க-ரைக்கு, நேற்று முன்தினம் வந்தானர். கரையோரத்தில் இருந்த தென்னந்தோப்பில் மீன் வலை சிக்கி கொண்டது. மகன், மகள் உதவியுடன் எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது திடீரென வந்த தேனீக்கள் மூவரையும் சரமாரியாக கொட்டின. இதில் பலத்த காயமடைந்த தங்கராஜ், மொளசி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார். டாக்டர் பரிசோத-னையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை