மேலும் செய்திகள்
வரதட்சணை கொடுமை: கணவர் மீது வழக்கு
28-Jul-2025
புன்செய்புளியம்பட்டி, வரலட்சுமி விரதம் மற்றும் ஆடி வெள்ளியை முன்னிட்டு, புன்செய்புளியம்பட்டி பூ மார்க்கெட்டில் நேற்று பூக்கள் விலை உயர்ந்து விற்கப்பட்டது.புன்செய்புளியம்பட்டி, பவானிசாகர் சுற்றுவட்டார பகுதியில், 100க்கும் மேற்பட்ட கிராமங்களில், மல்லிகை, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட மலர் வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கிருந்து கோவை, திருப்பூர் மாவட்டங்கள், கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. ஆனி மாதம் பூக்களின் தேவை குறைந்ததால் விலை சரிந்தது. இந்நிலையில் நாளை (ஆக.,8) வரலட்சுமி விரதம் மற்றும் ஆடி வெள்ளி கொண்டாடப்படுகிறது.கர்நாடக மாநிலத்தில் பிரசித்தி பெற்ற பண்டிகையாக விளங்கும் வரலட்சுமி விரதம் விமரிசையாக கொண்டாடப்படுவதால் மல்லிகை, சம்பங்கி உள்ளிட்ட பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதையடுத்து புன்செய்புளியம்பட்டி பூ மார்க்கெட்டில் பூக்களின் விலை அதிகரித்தது. கடந்த சில நாட்களுக்கு முன் மல்லிகை பூ ஒரு கிலோ, 1,000 ரூபாய்க்கு விற்ற நிலையில், நேற்று, 1,360 ரூபாய்க்கு விற்கப்பட்டது. முல்லை ஒரு கிலோ, 680 ரூபாய், ஒரு கிலோ சம்பங்கி, 200 ரூபாய், கனகாம்பரம் ஒரு கிலோ, 1,600 ரூபாய்க்கு விற்றது.
28-Jul-2025