உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பர்கூர் மலையில் விபத்து லாரி மோதி ஒருவர் பலி

பர்கூர் மலையில் விபத்து லாரி மோதி ஒருவர் பலி

பர்கூர் மலையில் விபத்துலாரி மோதி ஒருவர் பலிஅந்தியூர், அக். 27-பர்கூர்மலை, வெள்ளிமலை, பால்பண்ணையை சேர்ந்தவர் பந்தையன், 60; எப்பத்தான்பளையத்தை சேர்ந்தவர் மாதையன், 53; இருவரும் நேற்று காலை, 9:00 மணியளவில், ஹோண்டா சைன் பைக்கில், அந்தியூருக்கு புறப்பட்டனர்.தாமரைக்கரை - அந்தியூர் சாலையில், செட்டிநொடி வளைவில் திரும்பிய போது, எதிரே வந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக பைக் மோதியது. பைக்கில் அமர்ந்து வந்த பந்தையன் சாலையில் விழுந்தார். அப்போது லாரி பின்பக்க சக்கரம் தலையில் ஏறி இறங்கியதில் பலியானார். மாதையன் சிறு காயத்துடன் உயிர் தப்பினார். இது தொடர்பாக தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி பகுதியை சேர்ந்த டிரைவர் பசுபதி, 30, மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ