உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அந்தியூரில் கோவில் ஆய்வாளர் அலுவலகம் திறப்பு விழா

அந்தியூரில் கோவில் ஆய்வாளர் அலுவலகம் திறப்பு விழா

அந்தியூர், அந்தியூரில், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, செல்லீஸ்வரர் வகையறா கோவில் ஆய்வாளர் அலுவலகம், 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. பத்ரகாளியம்மன் கோவில் பின்புறம், ஈஸ்வரன் கோவில் அருகே கட்டி முடிக்கப்பட்டுள்ள கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி வாயிலாக நேற்று திறந்து வைத்தார்.இதை தொடர்ந்து, அந்தியூர் தி.மு.க., எம்.எல்.ஏ., வெங்கடாசலம் குத்து விளக்கேற்றி அலுவலகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். பேரூராட்சி தலைவர் பாண்டியம்மாள், துணைத் தலைவர் பழனிசாமி, கோவில் ஆய்வாளர் சிவமணி, செயல் அலுவலர் சீனிவாசன், செயலர் செந்தில் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ