௨௭ல் சத்திய ஞானசபை தருமசாலை திறப்பு
௨௭ல் சத்திய ஞானசபைதருமசாலை திறப்புஈரோடு, செப். ௨௫-பர்வதவர்தினி உடனமர் ராமநாத ஜோதீஸ்வரர் கோவில், தென்கயிலை பர்வதம் அறக்கட்டளையின் கீழ் அமையவுள்ள சிவபெருமானின் மிக பிரமாண்ட சிவாலயத்தின் கீழ், சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞான சபை, தருமசாலை திறப்பு விழா வரும், 27ம் தேதி நடைபெறவுள்ளது. இதுகுறித்து தென் கயிலை பர்வதம் அறக்கட்டளை நிர்வாகிகள் கூறியதாவது:சத்தி வட்டம், துண்டன்சாலையில் அமைந்துள்ள, சமரச சுத்த சன்மார்க்க சத்ய ஞானசபை சார்பில், தருமசாலை திறப்பு விழா வரும், 27ம் தேதி நடக்கவுள்ளது. விழாவில் அனைத்து சன்மார்க்க அன்பர்கள், ஆன்றோர், சான்றோர், மக்கள் குடும்பத்தினரோடு கலந்து கொள்ள வேண்டும். பண்ணாரி அம்மன் குழுமங்களின் தலைவர் பாலசுப்பிரமணியம், விழாவை தொடங்கி வைக்கிறார்.அன்று காலை மகா ஜோதி ஆராதனை, ஆன்மிக சொற்பொழிவு, வள்ளி கும்மி நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சி நடக்கிறது. நிகழ்ச்சி தொடர்பான விபரங்களுக்கு, சமரச சுத்த சன்மார்க்க சத்திய ஞானசபை, தென்கயிலை பர்வதம் அறக்கட்டளை, இக்கரைதத்தப்பள்ளி, துண்டன் சாலை -என்ற முகவரியை தொடர்பு கொள்ளவும்.