புறம்போக்கு இடத்தில் பிணத்தை புதைக்க எதிர்ப்பு
காங்கேயம், வெள்ளகோவில் அருகே கல்லமடை கிழக்கு தோட்டம் பகுதியை சேர்ந்தவவ் பழனியம்மாள், 87; நேற்று முன்தினம் உடல்நிலை சரியில்லாமல் இறந்தார். கல்லமடை -முத்தனம்பாளையம் வண்டி புறம்போக்கு பாதை பகுதியில், உடலை அடக்கம் செய்ய நேற்று மதியம் கொண்டு சென்றனர். இதற்கு அப்பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.வெள்ளகோவில் பி.டி.ஓ., சரவணன், வெள்ளகோவில் இன்ஸ்பெக்டர் ஞானபிரகாசம், ஆர்.ஐ., மோகனசுந்தரி பேச்சுவார்த்தை நடத்தினர். இது தொடர்பாக வரும், 7ம் தேதி ஆர்.டி.ஓ., தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி முடிவு செய்து கொள்ளலாம். தற்போது சடலத்தை புதைக்க அனுமதிக்க வேண்டும் என்றனர். இதை ஏற்றுக்கொண்டு சடலத்தை புதைக்க அனுமதித்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.