அரசு நிலத்தில் வைக்கப்பட்டுள்ள போர்டுக்கு எதிர்ப்பு
ஈரோடு:ஈரோடு பெரியமாரியம்மன் கோவில் நிலமீட்பு இயக்க தலைவர் சந்திர சேகர், ஈரோடு கலெக்டர் கந்தசாமியிடம், வழங்கிய மனு: ஈரோடு பெரிய மாரியம்மன் கோவில் பின்புறம், 12.66 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. கடந்த வாரம், 'சர்ச் ஆப் சவுத் இந்தியா, ஈரோடு - சேலம் டயோசியேசன் ஆபீஸ்' என்ற பெயரில், இரும்பு பைப்புகளுடன் கூடிய கட்டுமானத்தி ல் போர்டு வைத்துள்ளனர். ஏற்க னவே ஒரு முறை இதுபோல, 'ஈரோடு கிறிஸ்டியன் காலேஜ்' என்ற போர்டு அமைத்து, ஆர்.டி.ஓ., விசாரணைக்கு பின் அகற்றப்பட்டது. எனவே, அவ்விடத்தில் வைக்கப்பட்டுள்ள பெயர் பலகையை அகற்ற வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியுள்ளார்.