காளிங்கராயனில் இன்று நீர் திறக்க உத்தரவு
ஈரோடு:ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து காளிங்கராயன் வாய்க்கால் இரண்டாம் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்க நீர் வளத்துறை செயலர் பிரசாந்த் வடநெரே உத்தரவிட்டுள்ளார். அவர் அறிக்கையில், 'காளிங்கராயன் வாய்க்காலில், 15,743 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறும் வகையில், இன்று முதல் ஏப்., 3 வரை, 135 நாட்களுக்கு, 5,832 மில்லியன் கனஅடிக்கு மிகாமல், அணையின் தற்போதைய நீரிருப்பு, நீர் வரத்துக்கு ஏற்பவும், தேவைக்கேற்பவும், தண்ணீர் திறந்துவிட அனுமதி அளிக்கப்படுகிறது' என தெரிவித்துள்ளார்.