இயற்கை வேளாண் பொருள் கண்காட்சி
ஈரோடு, ஈரோடு, பி.எஸ்.பார்க் அருகே, தாலுகா அலுவலக வளாகத்தை ஒட்டி, மகளிர் குழுவினரின் உற்பத்தி பொருள், இயற்கையாக விளைவிக்கப்பட்ட பொருள், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களின் கண்காட்சி நேற்று துவங்கியது. வரும், 9ம் தேதி வரை நடக்க உள்ளது. கண்காட்சியில், 35 ஸ்டால் அமைக்கப்பட்டுள்ளது. இதில், 40க்கும் மேற்பட்ட மகளிர் குழுவினர் தங்கள் உற்பத்தி பொருட்களை விற்பனைக்கு வைத்துள்ளனர். கைவினை பொருள், கைத்தறி சேலை, பட்டுப்புடவை, சணல் பை, காட்டன் பை, மரச்செக்கு எண்ணெய் மற்றும் நாட்டு சர்க்கரை, மஞ்சள்,உருண்டை வெல்லம் என பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு உள்ளன.