மாநகராட்சி 39வது வார்டில் நிரம்பி வழியும் குப்பை தொட்டி
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி, 39வது வார்டுக்கு உட்பட்ட, கருங்கல்பாளையம் கே.ஏ.எஸ்., நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் மக்கும், மக்காத குப்பைகளை கொட்ட, நான்கு குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் முறையாக அள்ளாததால், நான்கு தொட்டியும் நிரம்பி வழிகிறது.இதுகுறித்து மக்கள் கூறியதாவது: தொட்டி நிரம்பி குப்பை சாலையில் கிடக்கிறது. தெருநாய்கள் இரை தேடி கிளறுவதால் சாலையில் குப்பை பரவி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. துாய்மை நகரம், ஸ்மார்ட் சிட்டி என மாநகராட்சி பெருமை பேசுகிறது. ஆனால் குடியிருப்பு பகுதியில் குப்பை தொட்டியை, தாங்கள் நினைத்த நேரத்துக்கு வந்ததுதான், துாய்மை பணியாளர்கள் சுத்தம் செய்கின்றனர். இதற்கு தீர்வு காணவேண்டும். வார்டு கவுன்சிலரும் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.