மேலும் செய்திகள்
விவசாயி அடித்துக்கொலை 4 பேரிடம் விசாரணை
16-Dec-2024
பவானி: திருப்பூர் மாவட்டம் சொக்கனுார், காட்டுப்பாளையத்தை சேர்ந்-தவர் வெங்கடாச்சலம், 45; பவானி அடுத்த ஜம்பையில் உள்ள அத்தை மகன் சேகருக்கு சொந்தமான ஆயில் மில்லில் டிரைவ-ராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் காலை, வெடிக்கா-ரன்பாளையம் பிரிவு அருகே மர்மமான முறையில் வெங்கடாச்-சலம் இறந்து கிடந்தார். வெள்ளித்திருப்பூர் போலீசார் விசாரித்தனர். வெங்கடாச்சலத்தின் மனைவி மரகதம், 36, கணவர் சாவில் மர்மம் இருப்பதாக, வெள்-ளித்திருப்பூர் போலீசில் புகாரளித்தார். இதையடுத்து மில் உரிமை-யாளரான உறவினர் சேகர், மூர்த்தி ஆகியோரிடம் விசாரித்தனர். முந்தைய நாள் இரவில் மது குடித்தபோது, வெங்கடாச்சலத்-துக்கும், சேகருக்கும், வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அதன்பின் வீட்டுக்கு காரில் சென்றபோதும் தகராறு ஏற்பட்டதால், வெடிக்கா-ரன்பாளையம் பிரிவு அருகே இறக்கி விட்டுள்ளார்.அங்கிருந்து சிறிது துாரம் சென்ற நிலையில், ஆத்திரம் அடங்காத சேகர், காரை திருப்பி வந்து நடந்து சென்று கொண்டிருந்த வெங்-கடாச்சலத்தின் மீது மோதியதில் பலியாகியுள்ளார். இதையடுத்து சேகர், மூர்த்தியை கைது செய்த போலீசார், பவானி நீதிமன்-றத்தில் நேற்று ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
16-Dec-2024