பச்சைமலை கோவில் உண்டியல்கள் திறப்பு
கோபி,:கோபியில் பிரசித்தி பெற்ற பச்சைமலை முருகன் கோவிலில், இரு மாதத்துக்கு ஒரு முறை உண்டியல் காணிக்கை எண்ணப்படுகிறது. இதன்படி கோவில் செயல் அலுவலர் விஸ்வநாதன், அறநிலையத்துறை இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி முன்னிலையில், ஆறு நிரந்தர உண்டியல்களை திறந்து எண்ணும் பணி நேற்று நடந்தது. தனியார் பள்ளி மாணவர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். மொத்தம், 3.40 லட்சம் ரூபாய் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது. கடந்த ஆக.,20ல் உண்டியல் எண்ணியபோது, 4.70 லட்சம் ரூபாய் காணிக்கையாக கிடைத்தது.