காளிங்கராயன் பாசனத்தில் நெல் அறுவடை தீவிரம்
ஈரோடு: பவானிசாகர் அணை யில் திறக்கப்படும் தண்ணீர், காளிங்க-ராயன் அணைக்கட்டில் பிரிந்து, காளிங்கராயன் வாய்க்கால் மூலம், பவானி, ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி தாலுகாவில் பாசன வசதி வழங்குகிறது. இப்பாசன பகுதியில், 15,400 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறுகின்றன. காளிங்கராயன் பாசனத்தில் நெல் பயிர் செய்ததில், ஈரோடு, கருங்கல்பாளையம், வெண்டிப்பா-ளையம் உள்ளிட்ட பகுதிகளில், 4,000க்கும் மேற்பட்ட ஏக்கரில் தற்போது அறுவடை நடந்து வருகிறது.இப்பகுதியில் பெரும்பாலும், இயந்திர அறுவடையே நடப்-பதால், வயல் வெளியிலும், தங்கள் கிராமப்பகுதியில் உள்ள களங்களிலும் நெல்லை உலர்த்தும் பணியில் விவசாயிகள் ஈடுபட்-டுள்ளனர். காளிங்கராயன் வாய்க்காலில் பாசனத்துக்கு தண்ணீர் நிறுத்தப்பட்ட போதிலும், மழை நீர், கழிவு நீர், கசிவு நீர் வாய்க்-காலில் செல்வதால், அவற்றையும் பாசனத்துக்கு பயன்படுத்தி, அறுவடை பணியை விரைவுபடுத்தி வருகின்றனர்.