போதையில் வாய்க்காலில் விழுந்த பெயிண்டர் சாவு
காங்கேயம்; காங்கேயத்தை அடுத்த பழையகோட்டை, முள்-வாடிபாளையத்தை சேர்ந்தவர் ரவி, 43, பெயிண்டர். காங்கேயம்-நத்தக்காடையூர் சாலையில் தனியார் கல்லுாரி அருகே எல்.பி.பி., வாய்க்கால் திட்டில், நேற்று முன்தினம் மாலை குடிபோதையில் படுத்திருந்தார். அப்போது புரண்டு படுத்ததில் வாய்க்காலில் விழுந்ததில் இறந்தார். காங்கேயம் போலீசார் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.