உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பெயின்டர் விபரீத முடிவு

பெயின்டர் விபரீத முடிவு

ஈரோடு, ஈரோடு கருங்கல்பாளையம் கமலா நகரை சேர்ந்தவர் சேஷாத்ரி, 30; இவரின் காதல் மனைவி ஜெயசித்ரா. தனியார் வங்கி ஊழியர். தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். சேஷாத்ரிக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. போதையில் அடிக்கடி தகராறு செய்ததால், மரப்பாலம் பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு ஜெயசித்ரா சென்று விட்டார். கடந்த, 30ல் வீட்டில் சேஷாத்ரி துாக்கிட்டு கொண்டார். ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. ஈரோடு டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை