உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / வக்பு வாரிய நிலம் என்பதால் விற்பதில் சிக்கல் தீர்வு காணக்கோரி பஞ்., உறுப்பினர் மனு

வக்பு வாரிய நிலம் என்பதால் விற்பதில் சிக்கல் தீர்வு காணக்கோரி பஞ்., உறுப்பினர் மனு

ஈரோடு, டிச. 10-கோபி தாலுகா சவுண்டப்பூர் பஞ்., வார்டு உறுப்பினர் ராஜகுரு உட்பட பலர், ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு வழங்கி கூறியதாவது: சவுண்டப்பூர் பஞ்., கணபதிபாளையத்தில் அரசுக்கு சொந்தமான நிலம், பிற சமூகத்தினருக்கு சொந்தமான நிலம், வீடுகளை வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என முறையீடு செய்துள்ளதால், நிலங்களை அவசர தேவைக்குக்கூட விற்க முடியவில்லை. அடமானம் வைக்க இயலவில்லை.சவுண்டப்பூர் பஞ்.,ல் இஸ்லாமிய சமூகத்தினருக்கு என சொந்தமான நிலத்தில் மசூதி, பள்ளிவாசல், தர்கா, கபஸ்தான் இல்லை. ஆனாலும், பல தரப்பினர் கட்டிய வீடுகள், வசிக்கும் நிலங்கள் வக்பு வாரியத்துக்கு சொந்தமானது என கூறி விற்கவும், வாங்கவும், அடமானம் வைக்கவும் விடாமல் தடுக்கின்றனர். இச்செயல்பாட்டுக்கு தடை விதிக்க வேண்டும்.இன்னும் சில இடங்களில் இஸ்லாமிய அமைப்பு பெயர்களில் அரசு நிலங்களில் பெயர் பலகைகள் வைத்து ஆக்கிரமிப்பு செய்வதையும் தடுக்க வேண்டும். இங்குள்ள நிலங்கள் வக்பு வாரியத்துக்கு சொந்தமானதல்ல என்பதை மாவட்ட நிர்வாகம் முறையாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை