உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஈங்கூர் யுனிக் அகாடமி பள்ளியில் பனோராமா வீக்

ஈங்கூர் யுனிக் அகாடமி பள்ளியில் பனோராமா வீக்

பெருந்துறை, நபெருந்துறை ஈங்கூர் தி யுனிக் அகாடமி பள்ளியில், 'பனோராமா வீக்' கொண்டாடப்பட்டது.பள்ளி தலைவர் இளங்கோ ராமசாமி தலைமை வகித்தார். பள்ளி கல்வி இயக்குனரும், முதல்வருமான உமையவள்ளி இளங்கோ முன்னிலை வகித்தார். விழாவில் முதல் நாள் கிருபா மற்றும் ரூபிகா செல்வராஜ், இரண்டாம் நாள் தேவி சக்திவேல் மற்றும் கர்ப்பகால ஆலோசனை நிபுணர் திவ்யா பார்த்தீபன், மூன்றாம் நாள் வித்யா மற்றும் சுபா, நான்காம் நாள் அசோக் ஆகியோர் நடுவர்களாகவும், சிறப்பு விருந்தினர்களாகவும் பங்கேற்றனர்.விழாவை முன்னிட்டு ஓவியம், நடனம், மலர் அலங்காரம், பழங்கள் மற்றும் காய்கறிகளை கீறி அலங்கரித்தல், வினாடி--வினா, விவாத மேடை, இசை கருவிகள் மீட்டுதல், நயத்தோடு கதை கூறுதல், பேச்சு போட்டி, நெருப்பில்லா சமையல், நாடகம், மாறுவேடம், களிமண் பொம்மை செய்தல், செய்தி வாசித்தல், கற்றல் நுண்ணறிவை சோதித்தல், பொது அறிவு போன்ற பலதரப்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டன.இதில் முதலிடத்தை லியாண்டர் பயஸ் அணியும், இரண்டாமிடத்தை விஷ்வநாதன் ஆனந்த் அணியும், மூன்றாமிடத்தை கபில்தேவ் அணியும், நான்காமிடத்தை பி.டி.உஷா அணியும் பிடித்து வெற்றி கோப்பைகளையும், சான்றிதழ்களையும் பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை