உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / நடுரோட்டில் ஆட்டம் காட்டிய அரசு பஸ்சால் பயணிகள் தவிப்பு

நடுரோட்டில் ஆட்டம் காட்டிய அரசு பஸ்சால் பயணிகள் தவிப்பு

ஈரோடு, ஈரோடு பஸ் ஸ்டாண்டில் இருந்து திருச்சி வழியாக காரைக்குடி செல்லும் அரசு பஸ், நேற்று மதியம், 1:௦௦ மணியளவில் புறப்பட்டது. இந்நிலையில் பின்பக்க சக்கரங்களின் செயல்பாடு சந்தேகத்தை ஏற்படுத்தியதால், டிரைவர் சோதனை செய்தார். இதில் போல்ட்டுகள் பழுதாகியிருப்பது தெரிந்தது. சென்னிமலை ரோட்டில் உள்ள ஈரோடு பணிமனைக்கு பஸ்சை ஓட்டி சென்றார். நீண்ட நேரமாகியும் பழுதை சரி செய்யாததால், கோபமடைந்த பயணிகள் ஓட்டுநர் மற்றும் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பழுதான பஸ் அந்தியூர் பணிமனையை சேர்ந்தது. இதனால் பழுதான போல்ட்டுகளுக்கு பதிலாக புதிய போல்ட் வழங்குவதில் ஈரோடு பணிமனைக்கு சிக்கல் ஏற்பட்டது. உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு பேசி காத்திருந்தனர். ஒரு மணிநேரத்துக்கு பிறகு ஒப்புதல் பெற்று, பழுது நீக்கப்பட்டு பயணிகளுடன் பஸ் புறப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை